-5 %
தமிழகத்தின் ஈழ அகதிகள்
தொ.பத்தினாதன் (ஆசிரியர்)
Categories:
Eezham | ஈழம்
₹124
₹130
- Year: 2014
- ISBN: 9789382033684
- Page: 96
- Language: தமிழ்
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஈழத் தமிழர் பற்றிய அக்கறையைப் பல வழிகளில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் சமூகம் நமது. அரசியலுக்கு அவ்வப்போது ஊறுகாய் போல இவ்வக்கறை பயன்படுகிறது. தமிழ் உணர்வுக்கும் இது அளவுகோலாகக் கொள்ளப்படுகிறது. ஆனால் ஈழத்திலிருந்து வந்து இங்கு அகதிகளாக முகாம்களில் வாழும் தமிழர்களைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. அவர்கள் வாழ்நிலை, அரசதிகாரம், அவர்களை நடத்தும் விதம், சலுகைகள் எனப்படுபவை செல்லும் வழிகள், எப்போதும் கண்காணிப்பு என்னும் அவலம், உதிரிகளாக அவர்களை மாற்றும் உத்திகள் எனப் பலவற்றிலும் கவனத்தைக் கோரும் வகையில் அகதி முகாம்களின் நிலையைப் பற்றியும் அங்கு வாழும் தமிழர்களைப் பற்றியுமான பல்வேறு விஷயங்களைத் தகவல்களாகவும் அனுபவமாகவும் இந்நூல் முன்வைக்கிறது. ஏற்கனவே 'போரின் மறுபக்கம்' என்னும் சுயசரிதை நூலை எழுதிக் கவனம் பெற்ற பத்தினாதன் தமிழ்ச் சமூகத்தைப் பார்த்து இந்நூல் வழியாகக் கேட்கும் வினாக்கள் கூர்மையும் காத்திரமும் ஆவேசமும் கொண்டவை. பேச்சுக்கும் வாழ்வுக்குமான முரணை அம்பலப்படுத்தி மனித உரிமையை நிலைநாட்டும் எழுத்துப் போராட்டம் இது. -பெருமாள்முருகன்
Book Details | |
Book Title | தமிழகத்தின் ஈழ அகதிகள் (Tamizhakathin Eela Agathigal) |
Author | தொ.பத்தினாதன் (Tho.Pathinathan) |
ISBN | 9789382033684 |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Pages | 96 |
Year | 2014 |
Category | Eezham | ஈழம் |